Friday, August 2, 2013

காதல் மின்னும் மின்னும்

பெண் :

காதல் மின்னும் மின்னும்
நெஞ்சுக்குள் பின்னும் பின்னும்
காதல் உந்தன் பேர் சொல்லும்

காதல் வெல்லும் வெல்லும்
காலத்தை வெல்லும் வெல்லும்
காதல் உந்தன் பேர் சொல்லும்

காதல் திரி எரியும்
உள்ளில் துடி துடிக்கும்
காதல் நரகமடா அன்பே

காதல் சலசலக்கும்
ஆழி அலையடிக்கும்
மெல்ல நிலைகுலையும் அன்பே


ஆண் :

தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்

அருகினில் நீயின்றி
பட படக்கும்

இரு விழி ஓரங்கள்
நீர் துளிர்க்கும்

அதிலும் உன் முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்

அதிகாலைப் போர்வைக்குள்
அடம் பிடிக்கும்

கவிதை உன்னை
சிலை வடிக்கும் - அட

எனக்கு உன்னை
மிகப் பிடிக்கும்



பெண் :

கொட்டும் மழையில் சூடாகும்
வெயில் வெட்டும் வேளை கூலாகும்

ஆண் :

காதல் பாடம் இதுவாகும் - அது
எல்லோருக்கும் பொதுவாகும்

பெண் :

பனிமலை சென்றால் சூடாகும்
எரிமலை தொட்டால் கூலாகும்

ஆண் :

காதல் பாடம் இதுவாகும் - அது
எல்லோருக்கும் பொதுவாகும்

ஆண் :

தட தட ரயிலென
சுட சுட வெயிலென
பட பட இமையிலே
பல பல சுமைகளை

கல கல குயிலா, சல சல மயிலா

அதிரடி அழகிலே
அடிக்கடி அசத்துறா

ஒரு நொடி நேசம்
ஒரு நொடி கோபம்
ஒரு சிறு சிரிப்பில்
விழி குறு குறுப்பில்

சந்தனத் தீயா
பந்தியில் தேனா

அவள் தானே என் தேசிய கீதம்.


ஆண் :

கண்ணு தோகை மாதிரி
பொண்ணு தென்றல் மாதிரி

துடி துடி துடித்திடும் ஒரு சுந்தரி
படித்திடும் அவள் இதழ் பருவ ராத்திரி

காதல் மந்திரமா
இல்லே எந்திரமா
இரவா, பகலா, உறைய வைக்கிற குளிரா

விரிந்திடும் அவள் எழில் கடலு மாதிரி
சரிந்திடும் அவள் சேலை அருவி மாதிரி

ஆண்

மாலை மங்கும் நேரம்
நெஞ்சுக் கூட்டில் ஏக்கம்
காதல் வான வில்லா - சொல்லாத
ஒற்றைச் சொல்லா

காதல் பட்டாம் பூச்சி
நெஞ்சுக்குள் வண்ணம் கூட்டி
காற்றில் உந்தன் வாசம்
கண்ணீரில் உந்தன் வாசம்.


பெண் :

காதல் மின்னும் மின்னும்
நெஞ்சுக்குள் பின்னும் பின்னும்
காதல் உந்தன் பேர் சொல்லும்

காதல் வெல்லும் வெல்லும்
காலத்தை வெல்லும் வெல்லும்
காதல் உந்தன் பேர் சொல்லும்

காதல் திரி எரியும்
உள்ளில் துடி துடிக்கும்
காதல் நரகமடா அன்பே

காதல் சலசலக்கும்
ஆழி அலையடிக்கும்
மெல்ல நிலைகுலையும் அன்பே


                                   Lyrics: Xavier


Album: One Way
Title: Kathal Minnum Minnum
Music: S Sanje
Lyrics: Xavier
Vocal: Mc Jeeva feat. Dhathri Kiran
Artist : Anusoorya
Editing: Sfx studio
Cinamtography: Rajithan
Produced by Vettimani / Tbb Entertainment
www.tbbstars.com

Download the album free from
www.tbbstars.com

No comments:

Post a Comment